விளையாட்டு திருவிழா 27.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி
பதிவு : ஆகஸ்ட் 27, 2018, 09:42 PM
ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் 100 மீ ஓட்டம் : இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் வெள்ளி பதக்கம் வென்றார். 11.32 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்த டுட்டி சந்த் 0.02 விநாடிகளில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.

400மீ ஓட்டம் : இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி

400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் வெள்ளி பதக்கம் வென்றார். அதே போல் ஆடவருக்காக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் யாகியா வெள்ளி பதக்கம் வென்றார்.

வில்வித்தை : இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

மகளிர் வில்வித்தை குழு பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரை இறுதியில் சீன தையே அணியை 225-223 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

குதிரை ஏற்றம் : இந்தியாவுக்கு 2 வெள்ளி

பெண்கள் பிரிவு  குதிரையேற்றத்தில் இந்திய வீராங்கணை பவாத் மிர்ஸா வெள்ளி பதக்கம் வென்றார். இதே போல் குதிரையேற்றம் குழு பிரிவிலும் இந்திய அணி  வெள்ளி வென்றது.

10,000 மீட்டர் ஓட்டம் : இந்தியாவிற்கு வெண்கலம் பறிபோனது

ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லக்‌ஷ்மனன்  வெண்கல பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில்,  அவர் வெள்ளை கோட்டை தாண்டி ஓடியதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பறிபோனது.

ஸ்குவாஷ்  : ஒரே நாளில் 3 பதக்கம்

ஆசிய போட்டி ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணி ஒரே நாளில் 3 வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.  தமிழக வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். 

குண்டு எறிதல் : இந்திய வீரர் தஜிந்தர்பால் தங்கம்

ஆசிய போட்டி ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் 20 புள்ள 75 மீட்டர் தூரம் வீசி முதலிடத்தை அவர் தட்டிச் சென்றார். இது ஆசிய போட்டியை பொறுத்தவரை புதிய சாதனையாகும். 


தொடர்புடைய நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - 24.10.2018 - சச்சினின் உலக சாதனையை முறியடித்த கோலி

விளையாட்டு திருவிழா - 24.10.2018 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார்.

13 views

விளையாட்டு திருவிழா - (15.10.2018) அர்ஜென்டினா மோட்டார் சூப்பர் பைக்: தொடர்ந்து 10வது முறை ஜோனத்தன் வெற்றி

விளையாட்டு திருவிழா - (15.10.2018) அர்ஜென்டினா மோட்டார் சூப்பர் பைக்: தொடர்ந்து 10வது முறை ஜோனத்தன் வெற்றி

12 views

விளையாட்டு திருவிழா 04.09.2018 - ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து வீரர் குக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு இலக்கணம் அலெஸ்டர் குக்.

21 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து

விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கேப்டனாகிறாரா ஹிட் மேன் ரோஹித் சர்மா?

516 views

விளையாட்டு திருவிழா - 13.11.2018 - தோனி இடத்தை பிடிப்பாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு திருவிழா - 13.11.2018 - ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் சவால்கள்

223 views

விளையாட்டு திருவிழா - 12.11.2018 -தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

விளையாட்டு திருவிழா - 12.11.2018 -பிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம்

38 views

விளையாட்டு திருவிழா - 09.11.2018 - ஒலிம்பிக்கில் மகளிர் மட்டும் பங்கேற்கும் விளையாட்டு....

விளையாட்டு திருவிழா - 09.11.2018 - நீச்சல், நடனம், ஜிம்னாஸ்டிக் என மூன்றும் சேர்ந்த விளையாட்டு

11 views

விளையாட்டு திருவிழா - 08.11.2018 - உலக சாதனை - ஒரே ஓவரில் 43 ரன்கள்

விளையாட்டு திருவிழா - 08.11.2018 - கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்கள்

33 views

விளையாட்டு திருவிழா - 06.11.2018 : நெருப்புடன் கூட விளையாட முடியும்...!

விளையாட்டு திருவிழா - 06.11.2018 : கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.