புல்லட் நாகராஜன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - வேலூர் மத்திய சிறையில் அடைப்பு
பதிவு : செப்டம்பர் 12, 2018, 12:54 AM
போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புல்லட் நாகராஜன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
தேனி பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜன் என்ற ரவுடி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, வாட்ஸ்-அப் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தான். முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என போலீசாருக்கு சவாலும் விடுத்திருந்தான். இந்தநிலையில், நேற்று பெரியகுளம் தென்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார்,  புல்லட் நாகராஜனை அதிரடியாக  கைது செய்தனர். அவனிடம் இருந்து கத்தி, 2 போலித்துப்பாக்கிகள், குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.  பின்னர், மேல்மங்கலத்தில் உள்ள அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்கும் தீவிர சோதனை நடத்தினர். பின்னர், புல்லட் நாகராஜன் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெரியகுளம் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான். அவர், புல்லட் நாகராஜனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அவன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2348 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2446 views

பிற செய்திகள்

புயலால் உயிரிழந்த கால்நடைகளை ஒரே இடத்தில் புதைக்கும் சோகம்

கஜா புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாகை மாவட்ட கடலோர பகுதிகளில், ஆடு, மாடு உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன.

20 views

மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்

கும்பகோணம் அடுத்த சன்னாநல்லூரில் புயல் பாதித்த நாளில் இருந்து மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

15 views

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.

14 views

மக்களின் உணவுப் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

3 இடங்களில் உணவு கூடங்கள், தயாராகும் 30,000 பொட்டலங்கள் - ராதாகிருஷ்ணன்

8 views

தேனி : கஜா புயலின் போது பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு

கஜா புயலின் போது பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தென்னை, வாழை மரங்கள் அடித்து செல்லப்பட்டதால் தேனி மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

13 views

நாகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்கிறார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.