அதிர்ஷ்டம் என நம்பி குள்ளநரியை வளர்த்தவர் கைது...
பதிவு : செப்டம்பர் 10, 2018, 02:03 PM
மாற்றம் : செப்டம்பர் 10, 2018, 04:13 PM
சிவகாசி அருகே அதிர்ஷ்டம் என நினைத்து குள்ளநரியை வளர்த்து வந்த பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்
நரி முகத்தில் தினமும் விழித்தாலோ, அல்லது அது ஊளையிடுவதைக் கேட்டோலோ, அதிர்ஷ்டம் வரும் என பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். சிவகாசியைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரும், இதே நம்பிக்கையை கொண்டிருந்ததால், தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சிவகாசி அருகேயுள்ள காக்கிநாடன்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வரும் ரத்தினசாமி, காட்டில் சுற்றித்திரிந்த குள்ளநரி ஒன்றை பிடித்துவந்து தனது ஆலையில் அடைத்து வளர்த்து வந்துள்ளார். தினமும் அந்த குள்ளநரியின் முகத்தில் விழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தநிலையில் ரத்தினசாமியின் ஆலையில் இருந்து அடிக்கடி நரி ஊளையிடும் சத்தம் கேட்கவே, அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து ஆலையில் சோதனைநடத்திய போலீசார், உள்ளே நரி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குள்ளநரி மீட்கப்பட்டது. கடந்த ஏழு நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் வைக்கப்பட்டிருந்த குள்ளநரி, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வனப்பகுதியில் விடப்பட்டது. மூட நம்பிக்கையை நம்பி குள்ளநரியை வளர்த்து வந்த ரத்தினசாமி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

காஷ்மீர் தாக்குதல் - அத்வானி கடும் கண்டனம்

காஷ்மீர் தாக்குதலுக்கு, பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

18 views

மாணவிகள் 14 பேருக்கு வாந்தி, மயக்கம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

6 views

காஷ்மீர் தாக்குதல்-ரஜினிகாந்த் கண்டனம்

காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான அந்த செயலுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

33 views

டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் : புல்வாமா சம்பவம் குறித்து விவாதம் என மத்திய அரசு தகவல்

20 views

கொட்டும் பனியில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக நாராயணசாமி தர்ணா

பிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

37 views

இறுதி வரை யாரையும் தாக்காத சின்னத்தம்பி யானை

முகாமிற்கு கொண்டு செல்வதற்காக பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.