கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
பதிவு : ஜூலை 30, 2018, 05:21 PM
மாற்றம் : ஜூலை 30, 2018, 06:04 PM
அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.
அனைத்து கோயில்களிலும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  மாவட்ட நீதிபதிகளுக்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிடக் கோரி,  ராஜபாளையத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு பாதுகாப்பான தரிசனம், அடிப்படை வசதிகள் மற்றும் அங்குள்ள புராதன, பழமையான பொருட்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு  அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை வரும் செப்டம்பர் 30ந் தேதிக்குள் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 1 ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 



தொடர்புடைய செய்திகள்

ரவுடிகளை கட்டுப்படுத்த ஏன் சிறப்புப்பிரிவு கூடாது? - நவ.30 -ல் பதிலளிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

எந்தெந்த அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்டவர்களை நிர்வாகிகளாக நியமித்துள்ளன என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி வருகிற 30 ஆம் தேதி பதில் அளிக்க, காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

33 views

அழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி பகுதியில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மதுரைவீரன் இன்று மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

878 views

மதுரை கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு

மதுரை மாவட்டம் மேலூரில் கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

157 views

பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

85 views

பிற செய்திகள்

மாமல்லபுரம் - " புராதன சின்னங்களை காண அனுமதி இலவசம்"

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19ந் தேதி முதல் 25ந் தேதி வரை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையால் கொண்டாடப்படுகிறது.

6 views

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை 8939 888 401 வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்

கஜா புயலால் தங்கள் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த வீடியோக்களை 89 39 88 84 01 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம்.

47 views

திருட்டு செல்போன்களை மீட்ட போலீசார்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் செல்போன் பறிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 217 நபர்களுக்கு காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு அவர்களது செல்போன்களை மீட்டு கொடுத்துள்ளனர்.

205 views

கச்சா எண்ணெய் கப்பலில் கசிவு

கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பல் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் அதனை இறக்கும் போது குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கசிவு ஏற்பட்டுள்ளது.

7 views

பட்டுக்கோட்டையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

68 views

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்கள் - 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

கஜா புயல் பாதித்த நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.