அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி : செரீனாவை வீழ்த்தினார் நவோமி ஓசாகா
பதிவு : செப்டம்பர் 09, 2018, 11:02 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா மற்றும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதினர். இதில், 20 வயதான ஒசாகா தொடக்கத்தில் இருந்தே போட்டியை தன்வசப்படுத்தினார்.  முதல் செட்டை 6க்கு 2 என்ற புள்ளி கணக்கில் ஒசாகா வென்றார். இதனைத் தொடர்ந்து ஆவேசமாக விளையாடிய செரீனா, 2வது செட்டை 5க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இருப்பினும், தொடர்ந்து உற்சாகத்துடன் ஆடிய ஒசாகா, மூன்றாவது செட்டை 6க்கு 4 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இதனிடையே அமெரிக்க ஓபன் வெற்றியை தொடர்ந்து, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமை ஒசாகா பெற்றுள்ளார். இந்த வெற்றியை ஜப்பான் நாட்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்திகள்

தடைகளை தகர்த்து எறிந்த செரினா வில்லியம்ஸ்

பிரசவத்திற்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 10 வது முறையாக களமிறங்கி ஆச்சரியப்படுத்திய செரினா வில்லியம்ஸ்.

322 views

பிற செய்திகள்

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் : 10 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டு புதிய சாதனை

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,ஜார்க்கண்ட் வீரர் நதீம் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

793 views

டிவிட்டரிலிருந்து விலகிய சானியா மிர்சா...

இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவதால், டிவிட்டரிலிருந்து கொஞ்ச நாள் விலகி இருக்க முடிவு எடுத்துள்ளதாக சானியா தெரிவித்துள்ளார்.

509 views

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது.

451 views

விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது...

விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி , பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

44 views

இந்தியா அபார வெற்றி : ரசிகர்கள் கொண்டாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆடி பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

451 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்:பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

1384 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.