ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியா அசத்தல்
பதிவு : ஆகஸ்ட் 29, 2018, 10:00 AM
இந்தோனேசியா ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை வென்று அசத்தி வருகிறது.
800 மீ ஓட்டம் : மஞ்சித் சிங்கிற்கு தங்கம் 

ஆசிய விளையாட்டு போட்டி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் மஞ்சித் சிங் தங்கப்பதக்கம் வென்றார். அதே போட்டியில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பேட்மிண்டன் : பி.வி.சிந்துவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இறுதிச் சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனை தாய் சூசிங்கை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 13க்கு21, 16க்கு21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். 



வில்வித்தை குழு பிரிவு : இந்தியாவுக்கு 2 வெள்ளி

வில்வித்தை குழு பிரிவில் இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றன. இரு பிரிவின் இறுதிச் சுற்றிலும் இந்திய அணிகள், தென் கொரிய அணிகளிடம் வீழ்ந்தன.



டேபிள் டென்னிஸ் தமிழக வீரர்கள் அடங்கிய குழுவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டியில், டேபிள் டென்னிஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி பதக்கத்தை தட்டிச் சென்றது. ஆடவர் குழு பிரிவில் தமிழக வீரர்கள் சத்யன் மற்றும் சரத் கமல் அடங்கிய குழு,  வெண்கலப் பதக்கத்தை வென்றது. 



ஆடவர் ஹாக்கி :  அரை இறுதிக்கு இந்திய அணி தகுதி

ஆடவர்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் போட்டியில் இலங்கை அணியை 20 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.



மகளிர் 200 மீ ஓட்டம் :  ஹிமா தாஸ் வெளியேற்றம்

மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் அரை இறுதி சுற்றிலிருந்து ஹிமா தாஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். போட்டி தொடங்கும் முன்பே ஓடியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் அரை இறுதி சுற்றில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.



மல்யுத்தப் போட்டி : இந்தியாவிற்கு 2 பதக்கம்

ஆசிய விளையாட்டு மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 52 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பின்கி பல்ஹாரா வெள்ளிப் பதக்கமும், மாலாபிரபா எல்லப்பா வெண்கல பதக்கமும் வென்றனர்.

400 மீ தொடர் ஓட்டம் : இந்தியாவிற்கு வெள்ளி 

ஆசிய விளையாட்டு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. தொடர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் முகமது அனாஸ், ஹிமா தாஸ், ராஜீவ் ஆரோக்யா, பூவம்மா ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.



தொடர்புடைய செய்திகள்

ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி : இந்தியாவுக்கு வெண்கலம்

ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

44 views

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரனுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

204 views

பிற செய்திகள்

கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி : வைஷ்ணவா, லயோலா கல்லூரி அணிகள் வெற்றி

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சுழற் கோப்பைக்கான, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிபெற்றன.

6 views

டி.என்.பி.எல். : லைக்கா கோவை கிங்ஸ் வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

5 views

புரோ கபடி லீக் தொடர் : தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற்றது.

35 views

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி அனுமதி

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற தோனிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

463 views

இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.

25 views

மேற்கிந்திய தீவு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆகஸ்ட் மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி மூன்று 20 ஓவர் போட்டி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.