இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட்
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 07:52 AM
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க முதலே தடுமாறியது. இறுதி வரை தனி ஆளாக போராடிய கேப்டன் கோலி 172 பந்தில் சதமடித்தார். 

டெஸ்ட் போட்டியில் இது அவருக்கு 22-வது சதம் மற்றும் இங்கிலாந்து மண்ணில் அவர் அடித்திருக்கும் முதல் சதம் ஆகும். 149 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆதில் ரஷித் பந்தில் கேட்ச் ஆனார்.  இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 274 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இங்கிலாந்தின் சாம் குர்ரான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். 13 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"தீவிரவாதத்தை அழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" : இந்தியா- அமெரிக்கா வலியுறுத்தல்

தீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

75 views

ஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

207 views

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

2900 views

அமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்

அமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்

62 views

பிற செய்திகள்

இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல் யாருக்கு சாதகம்..?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

806 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

268 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஹாங்காங்கிற்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

742 views

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் ?

துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1028 views

நீண்ட நாள் கனவு நனவானது - அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சத்யன் ஞானசேகரன்

அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

138 views

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் உள்ளிட்ட 18 பேருக்கு அர்ஜூனா விருதுகள்

விளையாட்டு துறையில் ஜொலிக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்படும்.

212 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.