வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை - 200 சவரன் நகை, ரூ.35 லட்சம் பணம் பறிமுதல்
பதிவு : செப்டம்பர் 12, 2018, 08:37 AM
கடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 200 சவரன் நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த பாபு  25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடலூரில் உள்ள அவரது வீட்டில் பிற்பகலில் லஞ்ச ஒழிப்புத்துறை  தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடைபெற்றது.சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து 35 லட்ச ரூபாய் பணம், 200 சவரன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் 45 வங்கி கணக்கு புத்தகங்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம் வாங்கியது தொடர்பான 505 பத்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பாபுவுக்கு 6 வங்கிகளில் லாக்கர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இன்று  அவரது லாக்கர்களையும்  லஞ்ச ஒழிப்துத்துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...

பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.

127 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

136 views

தமிழரசு கட்சியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்

இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

933 views

ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

207 views

பிற செய்திகள்

சாலை ஓரம் சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து

சிறுமி பலி - 2 வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்

26 views

மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

50 views

சென்னை விமான நிலையத்தில் ரூ3.30 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

45 views

தனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் : செல்போன்,பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்

சென்னையில் தனியார் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

42 views

10-வது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி வரும் 30ம் தேதி முதல் பிப்.4 வரை நடைபெறு உள்ளது...

10-வது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் வருகிற 30ந்தேதி முதல் பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெற உள்ளது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.