வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார்
பதிவு : செப்டம்பர் 12, 2018, 12:51 AM
சென்னையில் வங்கி மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் வீட்டு வேலைக்கார பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பழைய பல்லாவரம் பகுதியில் வசித்து வரும் யோக சேரன் தனியார் வங்கியில் மேலாளராக இருந்து வருகிறார். இவர் வீட்டிற்குள் நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று நுழைந்துள்ளது. வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் வீட்டில் வேலை பார்த்து வந்த மதுரையை சேர்ந்த மகாராணி என்ற பெண்ணே இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. கொள்ளையடிக்க திட்டமிட்ட மகாராணி, வீட்டில் வளர்க்கப்பட்ட 2 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். அதன்பின்னர் மதுரையில் இருந்து 4 இளைஞர்களை வரவழைத்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளையடித்த நகைகளுடன் தலைமறைவான மகாராணி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2172 views

பிற செய்திகள்

ரெயில்கள் ரத்து : மாற்று பாதையில் இயக்கம்

கஜா புயல் காரணமாக நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

290 views

இனி வரும் 7 புயல்களும் தமிழ்நாட்டை நோக்கியே வரும் - வானிலை ஆர்வலர் செல்வகுமார்

இனி வரும் 7 புயல்களும் தமிழ்நாட்டை நோக்கியே வரும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்

237 views

கஜா புயலின் வெளிப்பகுதி கரைக்கு வந்துவிட்டது - வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் வெளிப்பகுதி கரைக்கு வந்துவிட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

238 views

கஜாவுக்கு அடுத்தது என்ன...? - ரமணன் விளக்கம்

கஜா புயல் ஏற்பாடுகள் குறித்தும், எச்சரிக்கை கூண்டு ஏற்றுவது குறித்தும் வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்

4127 views

"தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளது" - வைரவநாத், தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ

கஜா புயலை இன்று கரையை கடக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ வைரவநாத் தெரிவித்துள்ளார்.

564 views

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 187 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 187 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.