பாபர் மசூதி வழக்கில் 2019 ஏப்ரலுக்குள் விசாரணை முடியுமா? - உச்சநீதிமன்றம் கேள்வி
பதிவு : செப்டம்பர் 11, 2018, 02:01 PM
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் விசாரணை முடிக்கப்படுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஜோஷி மற்றும் 19 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டனர். 

இதன்படி இந்த வழக்கு விசாரணை லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணை முடியும் வரை நீதிபதி யாதவின் பதவி உயர்வை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நீதிபதி யாதவ், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எத்தனை நாட்களில் வழக்கு விசாரித்து முடிக்கப்படும் என்பதை சீலிட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

பிற செய்திகள்

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - செப்.4-க்குள் பதில் மனுதாக்கல் செய்ய கிரண்பேடிக்கு உத்தரவு

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

25 views

ராணுவத்தில் புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க ராஜ்நாத் சிங் ஒப்புதல்

ராணுவத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக கண்காணிக்க புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

12 views

பிரதமர் மோடி - நைஜீரிய அதிபர் சந்திப்பு

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜாம்பியா நாட்டின் அதிபர் Edgar Chagwa Lungu-வுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

107 views

இன்று மதியம் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் - மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை

யமுனையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

23 views

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

103 views

அரசின் தவறை சுட்டிக்காட்டும் குடிமக்களை துன்புறுத்தும் செயல் - காங்கிர​ஸ்

அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் குடிமக்களை ஆள்பவர்கள் துன்புறுத்துவது அவர்களின் கோழைத்தனத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.