ரவி சாஸ்திரியின் செயல்பாடு எப்படி இருக்கு?
பதிவு : செப்டம்பர் 05, 2018, 07:23 PM
ரவி சாஸ்திரி மீது முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு, திறமையான வீரர்கள் இருந்தும் தோல்வி ஏன்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி  கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நியமிக்கப்பட்டார். 

விராட் கோலியுடன் அவர் கொண்ட நட்பின் காரணமாக, கோலியின் ஆதரவுடன் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே.

கேப்டன் மற்றும் வீரர்கள்  தவறு செய்யும் போது சுட்டிக்காட்டுவதும், அணியை எப்படி பலப்படுத்துவது, எப்படி யுத்திகளை கையாள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்குவதே பயிற்சியாளரின் பணி.


ஆனால் பயிற்சியாளர்கள் தாங்கள் கூறுவதை தான் செய்ய வேண்டும் என்றும், தங்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது என்பதையே இப்போதுள்ள கேப்டன்கள் விரும்புகின்றனர். இதனால் தான் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார் என்பது தனிக்கதை.

சரி ரவி சாஸ்திரி, விராட் கோலியின் கூட்டணி எப்படி செயல்படுகிறது என்பதை தற்போது காணலாம்.

ரவி சாஸ்திரி பொறுப்பேற்ற பிறகு இந்தியா 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 7 வெற்றி, 5 தோல்வி, 2 டிராவை இந்தியா கண்டுள்ளது. தோல்வி அடைந்த 5 போட்டிகளில் 4 போட்டியில் இந்தியா வென்றிருக்க வேண்டியது. அதற்கு வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.


ரவி சாஸ்த்ரி பொறுப்பேற்ற பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 22 போட்டிகளில் 18 போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 4 போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியது. இதில் கடைசியாக நடந்த இங்கிலாந்து தொடரில் மட்டும் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்திய அணி மீதுள்ள தற்போது குற்றச்சாட்டுகளே திறமையாக வீரர்கள் இருந்தும் தோல்வி அடைவது தான். இதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும், கேப்டன் கோலியுமே காரணம் என்று முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கோலியை நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கிய ரோஹித்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வதை நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நிறுத்தினார்.

5919 views

"ஹால் ஆப் பேம்" வீர‌ர்கள் பட்டியலில் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீர‌ரான ராகுல் டிராவிட்டிற்கு, ஹால் ஆப் பேம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

450 views

பிற செய்திகள்

உலக கிளிஃப் டைவிங் தொடர் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கேரி ஹண்ட்

இத்தாலியில் உலக கிளிஃப் டைவிங் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது.

12 views

இந்தியா வெற்றி - ரசிகர்கள் கொண்டாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

642 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2714 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று : இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

305 views

ரகுமான் இசையில் தொடங்குகிறது உலக கோப்பை ஹாக்கி தொடர்..!

உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

38 views

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்

நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.