வரலாறு காணாத வகையில் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை
பதிவு : செப்டம்பர் 04, 2018, 12:56 PM
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
* அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

* கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 23 பைசா அதிகரித்துள்ளது.  டீசல் விலையும் லிட்டருக்கு 1 ரூபாய் 69 பைசாவாக அதிகரித்துள்ளது.

* இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 41 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 17 காசுகள் அதிகம் ஆகும்.

* இதேபோல டீசல் விலையும் லிட்டர் ஒன்றிற்கு 20 காசுகள் உயர்ந்த்து, 75 ரூபாய் 31 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

* பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலைவாசியும் கணிசமாக உயரும் அபாயம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : ஆட்டோக்களை இழுத்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

113 views

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்க வேண்டும் - ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

66 views

"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு ஏன்? - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

அமெரிக்காவின் தவறான கொள்கை காரணமாக சர்வதேச சந்தையில், பெட்ரோலிய பொருட்களின் விலை கூடி வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

133 views

மீண்டும் ரூ.80 ஐ கடந்தது பெட்ரோல் விலை!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 5 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

141 views

ஓராண்டில் 207 முறை பெட்ரோல் விலை உயர்வு - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஓராண்டில் 207 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

154 views

பிற செய்திகள்

பொது இடங்களில் கொடி கம்பம் அமைக்க தடை கோரிய வழக்கு

பொது இடங்களில் கட்சி கொடி கம்பம் அமைக்க முழு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், எம்.வி. முரளிதரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

2 views

பெரியபுதூரில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் பிரதிஷ்டை

சேலம் பெரியபுதூர் பாறைக்காடு பகுதியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

4 views

தற்கொலைக்கு முயன்ற நிலானியின் மீது வழக்கு பதிவு..!

சின்னத்திரை நடிகை நிலானி மீது தற்கொலைக்கு முயன்றதாக மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

21 views

சாலையோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

திருப்பூர் மாவட்டம் பள்ளகாட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது.

284 views

ஒசூர் அருகே வியாபாரி வீட்டில் ரூ. 23 லட்சம் கொள்ளை

ஒசூர் அருகே அஞ்செட்டியில் ரமேஷ் என்ற வியாபாரி, வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 23 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

7 views

அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் லேப்டாப் திருடியவர் கைது

சென்னை அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் லேப்டாப் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

76 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.