ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேருக்கு தூக்கு : சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பதிவு : செப்டம்பர் 10, 2018, 07:57 PM
44 பேர் உயிரை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாஹிதின் பயங்கரவாதிகள் அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்திரி ஆகிய இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
44 பேர் உயிரை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாஹிதின் பயங்கரவாதிகள் அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்திரி ஆகிய இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 2007 ம் ஆண்டு ஆகஸ்டு 25 ம் தேதி,  ஐதரபாத்தின் கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்த வெளி திரையரங்கு ஆகிய இரு இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கில், இந்தியன் முஜாஹீதின் தீவிரவாதிகள் 5 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்திருந்த , சிறப்பு நீதிமன்றம், 3 பேரை விடுதலை செய்து, 2 பேர் மட்டும் குற்றவாளிகள் என அறிவித்திருந்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை வெளியிட்ட நீதிபதி, 2 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பிற செய்திகள்

அ.ம.மு.க நிர்வாகி கொலை வழக்கில் ஒருவர் கைது

கோவையில் மாயமான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகி ஜெயவேணுவை கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்ற நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

2 views

"தமிழக கூட்டுறவுத்துறை அகில இந்திய அளவில் முதலிடம்" - செல்லூர் ராஜு

தமிழக கூட்டுறவுத் துறை அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

8 views

"பாஜக-வின் 'பி டீம்' காங்கிரஸ்" - கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு

பாஜகவின் 'பி டீமாக' காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

9 views

கச்சபேஸ்வரர் கோயில் தெப்போற்சவம் - பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத தெப்ப உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

15 views

4 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிறுமியின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

203 views

பாரம்பரிய கருப்பட்டி வெல்லம் கொண்டு தயாராகும் கிறிஸ்துமஸ் பிளம்கேக்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக பாரம்பரிய கருப்பட்டி வெல்லம் கலந்து பல வகையான உலர்ந்த பழங்கள் கொண்டு பிளம் கேக் தயாரிக்கும் விழா சேலத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.