ரஜினிகாந்தின் அண்ணி காலமானார் : குடும்பத்துடன் இறுதி அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்
பதிவு : செப்டம்பர் 03, 2018, 09:49 PM
ரஜினிகாந்தின் அண்ணன் மனைவி கலாவதி, பெங்களூருவில் காலமானார்.
நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்யநாராயணராவின் மனைவி கலாவதி, உடல்நலக்குறைவால் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கலாவதி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்ற கலாவதியின் இறுதிச் சடங்கில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் பங்கேற்றனர். இளம் பருவத்தில் அண்ணனுடன் வசித்து வந்த ரஜினிகாந்த், அண்ணியின் மறைவால் மிகவும் சோகமாக காணப்பட்டார். 

பிற செய்திகள்

சர்வதேச திரைப்பட விழா : நடிகர் நடிகைகள் நேரில் சந்தித்து முதலமைச்சருக்கு அழைப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திரைப்படதுறையினர் நேரில் சந்தித்து 16வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

24 views

நடிகை சன்னிலியோனுக்கு மெழுகு சிலை

பாலிவுட் நடிகை சன்னிலியோனின் மெழுகு சிலை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

233 views

நடிகை சமந்தாவுக்கு ஓய்வு கொடுக்க நாகசைதன்யா முடிவு..!

சமந்தாவுக்கு சினிமாவில் தற்காலிக ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அந்த ஓய்வுக்கு பிறகு அவர் தொடர்ந்து நடிப்பார் என சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

4071 views

டால்பினை செல்லம் கொஞ்சிய த்ரிஷா

செல்லப்பிராணிகள் மீது அதிக ஆர்வம் காட்டும் நடிகை த்ரிஷா தற்போது டால்பின் ஒன்றை கொஞ்சுவது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

361 views

திருமணம் செய்ய மறுத்த நிலானி, தற்கொலை செய்து கொண்ட காதலன் - பின்னணி என்ன ?

திருமணம் செய்யாமலே 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த பிறகும் நடிகை நிலானி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியடைந்த உதவி இயக்குநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

1809 views

கேரளாவில் பா.ஜ.க. சார்பில் நடிகர் மோகன்லால் நிறுத்தமா?...

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததன் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நடிகர் மோகன்லால் நிறுத்தப்பட உள்ளதாக பேசப்படுகிறது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.