எப்படி பரவுகிறது எலிக்காய்ச்சல்? ...
பதிவு : செப்டம்பர் 03, 2018, 06:22 PM
கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய சில தகவல்கள்.
கேரள மாநில மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு எழுவதற்குள் அடுத்த கட்ட அச்சுறுத்தலாக வந்து நிற்கிறது எலிக்காய்ச்சல். எலிக்காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகளால் அந்த மாநில மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எலிக்காய்ச்சல் என்பது எலியின் சிறுநீரில் இருந்து வெளியாகும் நுண்ணுயிர்களால் பரவக் கூடியது. பொதுவாக வீடுகளைச் சுற்றி வசிக்கும் எலிகள் வெளியிடும் கழிவுகள் தண்ணீருடன் கலந்து விடுகிறது. இந்த தண்ணீரை நாம் பயன்படுத்தும் போது நமக்கு தெரியாமலே அது நம்மில் கலந்து விடுவதுண்டு. இதுதான் இந்த நோய் பரவுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. 

எலிக்காய்ச்சல் தொற்று என்பது எல்லாரையும் தாக்கக் கூடியது அல்ல. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மற்றும் நோய் தாக்கம் உள்ளவர்களை இது எளிதாக தாக்கும். இதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்படுகிறது. மற்ற நாட்களை விட மழைக்காலங்களில் தான் எலிக்காய்ச்சலின் பாதிப்புகள் அதிகம் இருக்கும். காரணம் மறைவிடங்களில் வாழும் எலிகள் வெளியிடும் கழிவுகள் தண்ணீருடன் கலந்து விடுவது மழைக்காலத்தில் தான். 

எனவே எலிக்காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டியது அவசியம். மேலும் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது கை, கால்களை நன்றாக கழுவினால் போதும். பொதுவாக மழைக்காலங்களின் போது ஏரி, குளம் போன்ற பொது இடங்களில் குளிக்காமல் இருப்பதும் நல்லது. சுய மருத்துவ முறைகளை விட்டுவிட்டு நோய்க்கான அறிகுறி தெரிய தொடங்கிய உடனே உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதும் இங்கு அவசியமான ஒன்று.

தொடர்புடைய செய்திகள்

எலிக்காய்ச்சலால் 43 பேர் மட்டுமே உறுதி செய்யப்பட்ட மரணங்கள் - கேரள சுகாதார துறை

கேரளாவில் எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட மரணம் 43 மட்டுமே என கேரள சுகாதார துறை அறிவித்துள்ளது.

50 views

பிற செய்திகள்

பதவிக்காக தம்பிதுரை பா.ஜ.க. வேட்பாளராக கூட மாறிவிடுவார் - தினகரன்

எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என விரும்பும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தேவைப்பட்டால் பா.ஜ.க. வேட்பாளராக கூட மாறிவிடுவார் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

0 views

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தமிழக அரசு ஆதரவா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பது தொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

66 views

கலிபோர்னியா : மின்சாரத்தில் இயங்க கூடிய ஆடி கார் அறிமுகம்..!

மின்சாரத்தில் இயங்க கூடிய காரை பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான 'ஆடி' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

54 views

ஹெச். ராஜாவிற்கு அருண்மொழிதேவன் எம்.பி. பகிரங்க சவால்

ஹெச்.ராஜா குற்றம் சாட்டியதுபோல, தான் கோவில் நிலத்தை அபகரித்த‌தாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகி விடுவதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் சவால் விடுத்துள்ளார்.

19 views

அணுசக்தி கழக தலைவராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமனம்

இந்திய அணுசக்தி கழக தலைவராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

29 views

சபரிமலையில் கூட்டம் குறைவாக இருப்பதால் நல்ல தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நல்ல தரிசனம் கிடைத்தாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.